ஷாலினி ஜெபசிங் பத்ரஸ்

ஷாலினிக்கு இலாப நோக்கமற்ற ஊடகத்தில் இருபத்தி நான்கு வருட வேலை அனுபவம் உண்டு. அவருடைய பெற்றோராகிய எமில் மற்றும் ஆனந்தி ஜெபசிங், சார்லஸ் மற்றும் சிந்தியா ஸ்வின்டால் போன்ற தொலை நோக்கு கொண்ட தலைவர்களுடன் பணிபுரிந்திருக்கிறார். வேலை செய்ய தொடங்கியது முதல், அவர் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளுக்கு பயணித்தும், அங்குள்ள தலைவர்களோடு வேலையும் செய்துள்ளார். கோடை 2012 இல் ஷாலினி தலைமைத்துவத்தில் தன்னுடைய முனைவர் படிப்பை தொடங்கினார். தலைமைத்துவத்தை ஆராய்ந்தபோது வேதத்தின் தன்மைகளை நடைமுறை வழக்கமாய் கொண்டுள்ள வேலை ஸ்தலங்களில் மகிழ்ச்சி நிறைந்த குழு உறுப்பினர்களும், நீண்ட கால வளர்ச்சியும் உள்ளதை கவனித்தார். வேதத்தின் நெறி முறைகளில் காணப்படும் சில கருப்பொருள்கள் அன்பு, நம்பிக்கை, மன்னித்தல், விடா முயற்சி மற்றும் உண்மை. அதே வருடத்தில் அவர் வேதம் சார்ந்த தலைமைத்துவ கொள்கைகளை வேலை ஸ்தலத்திற்கு கொண்டு வர ‘Eirene’ குழுவை நிறுவினார். 2014-ல் அவர் உறுதியான வேத பாடத்தை உலகமெங்குமுள்ள இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவோருக்கு கொண்டு செல்ல ‘Mobile Christian Network’ ஐ தொடங்கினார். 

வளரும் போது ஷாலினி தன்னுடைய தகப்பனாரின் தலைமைத்துவத்தில் மூன்று காரியங்களை கவனித்தார். அவர் உண்மையை நடைமுறை வழக்கமாய் கொண்டிருந்தார். அவர் ஊழியம் செய்ய விரும்பிய யாரையும் நிராகரிக்கவில்லை. அவர் வெகுஜன பணிநீக்கம் செய்ததுமில்லை. அவருடைய தரிசனமும், மக்கள் மீது அவர் வைத்த உயர் மதிப்பும் வளர்ச்சியை உண்டாக்கியது. வேதத்தின் தலைமைத்துவ தன்மைகளை கொண்ட மற்ற தலைவர்களிடமும் இதே பண்புகளைக் கண்டார். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஷாலினி குழு உறுப்பினர்கள் சிறப்பான வேலை ஸ்தலத்தை உருவாக்கவும் வேலையில் நிறைவை காணவும் உதவும் இந்த உயர் சிந்தனையுடைய தலைமைத்துவ கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார்.