TAMIL MOBILE CHRISTIAN NETWORK'S

தலைமைத்துவ  கருத்தரங்கு

LEADERSHIP SEMINAR

நெருக்கடி, படைப்பு, திறமை மற்றும் பலவற்றைக் குறித்து வேதாகமம் என்ன போதிக்கிறது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்!

நாள் – நேரம்

நவம்பர் 11, சனிக்கிழமை

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

பதிவுக் கட்டணம்

 

பொது மக்கள்: Rs.600/

போதகர்கள்: Rs 300/

(மதிய உணவு, தேநீர்,

சிற்றுண்டி வழங்கப்படும்)

பஸ் ரூட் பற்றி தெரிந்து கொள்ள

இங்கே கிளிக் செய்யுங்கள் 

பஸ் ரூட் 

About the Teachers

ஜான். கே. ஜான்

ஜான். கே. ஜானுக்கு மனித வள செயல்பாட்டில் 25 ஆண்டிற்கும் மேலான அனுபவம் உள்ளது. ஆனாலும், கற்றல் கற்பித்தல் மீது அவருக்கு இருக்கும் தீவிர விருப்பம் அவரை கற்றல் மற்றும் மேம்பாடு என்னும் இந்த பொறுப்பிற்கு முழு நேரமாக ஜூன் 2003-ல் அழைத்துச் சென்றது.

அவர் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் மும்பையின் கூட்டாண்மை அமைப்பின் கற்றல் மற்றும் மேம்பாட்டின் துணை தலைவராய் பணியாற்றுகிறார்.

இவர் ஒரு T3 Zig zaglar சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் மட்டுமன்றி, மனித நடத்தையை புரிந்து கொள்ளுதலில் முதல் நிலை பெர்க்மேன் ஆலோசகராகவும், மிக சமீபத்தில் 'Gallup Strengths Coach' ஆகவும் சான்றளிக்கப்பட்டவர் (தொண்ணூற்றில் ஒன்று இந்தியாவிலும், ஐந்நூற்று அறுபதில் ஒன்று உலகிலும்).

ஜான், தேவனுடைய பணியில் தன் வாலிப நாட்கள் முதலாய் தன் தாய் சபையாகிய சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்திலும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முக்கியமாய் இசையின் வாயிலாய் வழங்கிய நண்பர் சுவிசேஷ ஜெபகுழுவின் வாலிப பிரிவாகிய 'நவோதயா' குழுவிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இசையின் மேல் உள்ள தீவிர விருப்பம், அவரை முதலில் ஆலய பாடகர் குழுவிலும், பின்பு நவோதயா குழுவோடும், மிக சமீபத்தில் கர்த்தரை ஆராதித்து போற்றும் ஒரு தனிக்குரலிசைஞராய் உருவாக்கியுள்ளது. கர்த்தருடைய கிருபையால், இவர் இரண்டு குறுவட்டு செருகேடுகளை வெளியிட்டுள்ளார். மேலும் அறிந்து கொள்ள www.johnkjohn.com  செல்லவும்.

அவர் தன்னுடை தாய் சபையின் கூடுகைகளிலும், அவருக்கு அழைப்பு கொடுக்கும் மற்ற ஊழியங்களிலும் பேசுவதுண்டு. அவருடைய சில சமீபத்திய அழைப்புகள் இவை:

  •   வாலிபர் மாநாடு, சி.எஸ்.ஐ தூய திரித்துவ ஆலயம், சென்னை - அக்டோபர் 2016

  •   வாலிபர் கூடுகை 2017 - ஜெபிக்கும் கேரள ஊழியங்கள், கோட்டயம் - ஏப்ரல் 2017

  •   SALT மாநாடு 2017, சென்னை - ஏப்ரல் 2017

  •   குடும்ப கூடுகை 2017, எப்வொர்த் மெதடிஸ்ட் ஆலயம், மும்பை - ஆகஸ்ட் 2017

  •   வாலிபர் மாநாடு, மும்பை சி.எஸ்.ஐ. ஆலயங்கள் - ஆகஸ்ட் 2017

 

ஜானும், இல்லத்தரசியாகிய அவருடைய மனைவி ஷீஜாவும் தங்களுடைய மூன்று பிள்ளைகளோடு பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவருடைய பிள்ளைகள் யோனத்தான் மூன்றாம் ஆண்டு பட்டதாரி படிப்பையும், ரேச்சல் இரண்டாம் ஆண்டு பட்டதாரி படிப்பையும், சூசன் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

சாம் ஜோன்ஸ் செரியன்

சாம் ஜோன்ஸ் செரியன் மதுரை வேதாகம கல்லூரியின் (தமிழ் நாடு) முதல்வராய் 2014 முதல் பணியாற்றி வருகிறார். அவர் தன் பணியை மதுரையில் துவங்கும் முன்பாக ‘டல்லாஸ் இறையியல் கல்லூரியில்’ கிறிஸ்துவ தலைமைத்துவத்தில் Th. M மற்றும் M. A. பட்டங்களை பெற்றார். இவருடைய கல்லூரியின் குறிக்கோள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களை உருவாக்குவது. தாழ்மையான தேவ தலைவர்களை ஆயத்தப்படுத்தி அந்த சீஷர்களைக் கொண்டு ஆலயங்களை உருவாக்கலாம் என சாம் நம்புகிறார். இப்பணியின் நோக்கம் ஆலயங்களை ஸ்தாபிப்பது. இவர் உறவுகளை மதிப்பவர். மேலும் கிறிஸ்துவின் தன்மையை தான் ஈடுபடும் பற்பல ஊழியங்களின் மூலம் முன்மாதிரியாய் காண்பிக்க நாடுபவர்.

இவர் வசிக்கும் பகுதியிலுள்ள ஆலயமாகிய 'மதுரை சுவிசேஷ மண்டபத்தின்' பணிகளில் மிகவும் ஈடுபட்டிருப்பவர். இவர் மதுரையின் கிராமப்புற பகுதியிலுள்ள நற்செய்தியாளர்கள் மேல் அக்கறை உள்ளவராய் அவர்களுக்கு கணினிமூலம் இறையியல் பயிற்சி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறார். இவர் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்தும் வேதாகமத்தை கற்றுக்கொப்பவர். இவருடைய இல்லம் நூற்றுக்கணக்கானோர் இளைப்பாறும் ஒரு திறந்த வீடாக அமைந்துள்ளது. இவர் பெரிய தொலைநோக்கு கொண்ட தன்னுடைய தாத்தாவாகிய மறைந்த திரு. எம். ஈ. செரியன் அவர்களால் ஆழ்ந்த தாக்கம் பெற்றவர். இவருடைய துணைவியார் ஷீபா இவருடைய நோக்கத்தை நிறைவேற்ற இணைந்து செயல்படுபவர். இவர்களுக்கு சமந்தா என்ற ஒரு வயது நிரம்பியுள்ள மகள் உண்டு. 

அட்டவணை:

Our partners

TGSi
Living Word Ministry, Lebanon
(c) 2017 Eirene Group LLC