ஜான். கே. ஜான்

ஜான். கே. ஜானுக்கு மனித வள செயல்பாட்டில் 25 ஆண்டிற்கும் மேலான அனுபவம் உள்ளது. ஆனாலும், கற்றல் கற்பித்தல் மீது அவருக்கு இருக்கும் தீவிர விருப்பம் அவரை கற்றல் மற்றும் மேம்பாடு என்னும் இந்த பொறுப்பிற்கு முழு நேரமாக ஜூன் 2003-ல் அழைத்துச் சென்றது.

அவர் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் மும்பையின் கூட்டாண்மை அமைப்பின் கற்றல் மற்றும் மேம்பாட்டின் துணை தலைவராய் பணியாற்றுகிறார்.

இவர் ஒரு T3 Zig zaglar சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் மட்டுமன்றி, மனித நடத்தையை புரிந்து கொள்ளுதலில் முதல் நிலை பெர்க்மேன் ஆலோசகராகவும் மிக சமீபத்தில் 'Gallup Strengths Coach' ஆகவும் சான்றளிக்கப்பட்டவர் ('தொண்ணூற்றில் ஒன்று இந்தியாவிலும் ஐந்நூற்று அறுபதில் ஒன்று உலகிலும்').

ஜான், தேவனுடைய பணியில் தன் வாலிப நாட்கள் முதலாய் தன் தாய் சபையாகிய சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்திலும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முக்கியமாய் இசையின் வாயிலாய் வழங்கிய நண்பர் சுவிசேஷ ஜெபகுழுவின் வாலிப பிரிவாகிய 'நவோதயா' குழுவிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இசையின் மேல் உள்ள தீவிர விருப்பம், அவரை முதலில் ஆலய பாடகர் குழுவிலும், பின்பு நவோதயா குழுவோடும், மிக சமீபத்தில் கர்த்தரை ஆராதித்து போற்றும் ஒரு தனிக்குரலிசைஞராய் உருவாக்கியுள்ளது. கர்த்தருடைய கிருபையால், இவர் இரண்டு குறுவட்டு செருகேடுகளை வெளியிட்டுள்ளார். மேலும் அறிந்து கொள்ள www.johnkjohn.com  செல்லவும்.

அவர் தன்னுடை தாய் சபையின் கூடுகைகளிலும் அவருக்கு அழைப்பு கொடுக்கும் மற்ற ஊழியங்களிலும் பேசுவதுண்டு. அவருடைய சில சமீபத்திய அழைப்புகள் இவை.

¨       வாலிப மாநாடு, சி.எஸ்.ஐ தூய திரித்துவ ஆலயம், சென்னை - அக்டோபர் 2016

¨       வாலிப கூடுகை 2017 - ஜெபிக்கும் கேரள ஊழியங்கள், கோட்டயம் - ஏப்ரல் 2017

¨       Salt மாநாடு 2017, சென்னை - ஏப்ரல் 2017

¨       குடும்ப கூடுகை 2017, எப் வொர்த் மெதடிஸ்ட் ஆலயம், மும்பை - ஆகஸ்ட் 2017

¨       வாலிப மாநாடு, மும்பை சி.எஸ்.ஐ. ஆலயங்கள் - ஆகஸ்ட் 2017

ஜானும், இல்லத்தரசியாகிய அவருடைய மனைவி ஷீஜாவும் தங்களுடைய மூன்று பிள்ளைகளோடு பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவருடைய பிள்ளைகள் யோனத்தான் மூன்றாம் ஆண்டு பட்டதாரி படிப்பையும், ரேச்சல் இரண்டாம் ஆண்டு பட்டதாரி படிப்பையும், சூசன் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.